Thursday, 5 April 2012

அய்யய்யோ கிரிக்கெட்: நினைத்தாலே பயமாக இருக்கிறது


போதும்போதும் என்கிற அளவிற்கு இந்த கிரிக்கெட் காய்ச்சல் அனைவருக்கும் பரவிவிடும்பிடிக்காதவர்களையும் படுத்தி எடுத்துவிடும்."ஸ்கோர்என்ற வார்த்தையால் கொன்றுஎடுத்துவிடுவார்கள்கடமைக்கு விடுமுறை கொடுத்துவிட்டுஉழைப்பை வீணடித்தபடி வீட்டின் தொலைக்காட்சியில் மொத்தகூட்டமும் முடங்கிப்போகப் போகிறது.இது பெரியகுற்றம் என்றால் கடமையைவேலையை செய்யப்போன இடத்தில்,"டிவியிலும்கம்ப்யூட்டர் திரையிலும் கிரிக்கெட் பார்ப்பது குற்றத்திலும் கொடியதுதுரோகத்தில் சேர்த்திஇந்தகுற்றத்தையும்துரோகத்தையும் எந்தவித மனசஞ்சலமும் இல்லாமல் செய்யமொத்த கூட்டத்தையும் மூளைச்சலவை செய்து தயாரக்கி வைத்தாகிவிட்டதுஇதைவிமர்சிப்பவன்தான் இன்றைய காலக்கட்டத்தில் கோமாளியாக சித்தரிக்கப்படுவான்.
 தலைநகரின் தலைமைச் செயலகமே மின்தட்டுப்பாடு காரணமாக "ஜெனரேட்டரில்ஓடிக்கொண்டு இருக்கிறதுதங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வை சந்திக்கமெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பும் புனித பணியை மேற்கொள்ளப் போகிறார்கள்மின்சாரம் இல்லாததால்பலஉயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் கூட நடக்காமல் தள்ளிப்போடப்படும் நிலையில்இரவை பகலாக்கும் விதத்தில் வாரியிறைக்கப்படும் வெளிச்சத்திற்கு காரணமானமின்சாரத்தை வீணாக்கும் கிரிக்கெட் இந்த நேரத்தில் அவசியம்தானா என்று வழக்கு போடப்பட்டுள்ளதுஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலையில்லாமல் பிரபுதேவாபிரியங்காசோப்ரா பங்கேற்கும் நடனங்களுடன் சென்னையில் கிரிக்கெட் திருவிழா குதூகலமாக துவங்கிவிடும்மின்சாரமே இல்லாவிட்டாலும் "ஜெனரேட்டரைஒட்டியாவது கிரிக்கெட்டைநடத்தி விடுவார்கள். "ஜெனரேட்டருக்கானடீசலுக்கு எங்கே போவதுகொஞ்சநாளைக்கு மானியமாக வழங்கப்படும் டீசலை இந்த பக்கம் திருப்பிவிடவேண்டியதுதான்நமக்குகிரிக்கெட்தானே முக்கியம்ஒரு வேளை வழக்கின் அடிப்படையில் கிரிக்கெட் நடைபெறாமல் போனால் இடிவிழுந்தது போலாகிவிடுவான் நம் மறத்தமிழன்காரணம் ஒரு சிலமணி நேர ஆட்டத்தை காணமுதல் நாளே வரிசையில் நின்றுபோலீசிடம் அடிபட்டுஇந்த ஆட்டத்தை பார்க்க 700 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான டிக்கெட்டைமுண்டியடித்து வாங்கி தீர்த்துவிட்டார்கள்பால் விலைபஸ் டிக்கெட் விலை கூடிவிட்டது என்று இவர்கள் எல்லாம் வாயைத்திறந்து பேசவே கூடாது.
 200 நாடுகளுக்கு மேல் இருந்தாலும்கடந்த 100 ஆண்டுகளாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 நாடுகளில் மட்டுமே வளர்ந்த இந்த கிரிக்கெட்டிலும்இரண்டு நாடுகள் இன்றைக்கும்உப்புக்கு சப்பாணிதான்.தோற்பதற்காகவே விளையாட வருபவர்கள்பிறகு ஒரு நாட்டை ஆட்டையிலே சேர்க்கமாட்டார்கள்மீதம் உள்ள ஐந்து நாட்டின் வீரர்களை ஆளாளுக்குஏலம் எடுத்து கோடி,கோடியாக சம்பாதிக்க நடத்தப்படுவதுதான் இந்த சீசன் கிரிக்கெட் விளையாட்டுவரும் 4ம் தேதி துவங்கி மே மாதம் 27ம் தேதி வரை நடைபெறும் போட்டியில்மொத்தம் 76 போட்டிகள் நடக்க உள்ளனதோராயமாக ஒரு வீரர் 16 ஆட்டங்களில் கலந்து கொண்டு 48 மணிநேரம் களத்தில் இருப்பார்இதில் பன்னாட்டு விளம்பரம் அச்சிடப்பட்டபேட்டை "கேமராமுன் நீட்டிய நேரம்எப்போதாவது பந்தின்பின் ஓடிய நேரம்எப்போதும் ரசிகைகளுக்கு "ஆட்டோகிராப்போட்டுக்கொடுத்த நேரம் உள்ளிட்டவையும் அடங்கும்.ஒரு நிமிடத்திற்கு 1200 ரூபாய் அளவில் சம்பாத்தியம் என்றால் கணக்கு போட்டுக்கொள்ளுங்கள் மயக்கமே வரும்.இதனால்தான் டெஸ்ட்ஒருநாள் போட்டியைவிட இந்த"டுவென்டி-20'யில் தான் வீரர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்ரொம்ப மெனக்கெட வேண்டாம்ஐந்து நாளும் வெயிலில் நிற்கவேண்டாம்நாட்டுக்காக விளையாடுகிறோம் என்று "சீன்'காட்ட வேண்டாம்.
 உலக கோப்பையின் போது ஓடஓட விரட்டி தோற்கடிக்கப்பட்ட இலங்கை அணியின் மலிங்காமும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார்அவருடன் சச்சினும்கைகோர்த்துக்கொண்டு களம் இறங்குவார்கேட்டால் "கிரிக்கெட் இஸ்  கேம்என்பார்கள்அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாதுபணம் தான் பிரதானம்பல காலமாககிடப்பில் உள்ள எல்லைப்பிரச்னை உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகளை பற்றி ஒரு மணி நேரம் உட்கார்ந்து பேச நேரமில்லாத இந்தியா-பாக்.பிரதமர்கள் இணைந்து பல மணிநேரம் உட்கார்ந்து பார்க்கும் விளையாட்டாயிற்றேபோதும்போதா தற்கு சோனியாவும்ராகுலும் கூட சிறப்பு பார்வையாளர்கள்இப்படி முக்கியஸ்தர்கள் துவங்கி சாமன்யன் வரைதந்த ஆதரவால் மண்சார்ந்தமரபுசார்ந்த விளையாட்டை முனை தெரியாமல் நசுக்கிய பெருமை இந்த கிரிக்கெட்டிற்கு மட்டுமே உண்டுநசுக்கப்பட்டதில் தேசிய விளையாட்டானஹாக்கியும் அடக்கமாகிப்போனதுதான் பெரிய வேதனை.
 இப்படி தேசமே கொண்டாடிப்பார்த்தமும்பையில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் "மேட்ச் பிக்சிங்சூதாட்டம் நடந்தது என்று ஆங்கில பத்திரிகை ஒன்று தக்க ஆதாரம்இருப்பதாக சொல்லி செய்தி வெளியிட்டதுஇதற்கு ஒரு நடிகைதான் "மீடியேட்டர்என்று முகம் தெரியாமல் ஒரு நடிகையின் படத்தையும் வெளியிட்டதுஅப்படியானால் அன்றுரசிகர்கள் காட்டு கத்தலாய் கத்தியதுவிடியவிடிய "டிவி', பார்த்ததுவிடிந்தபிறகும் வெடி போட்டதுமுகம் தெரியாதவர்களுக்கு இனிப்பு வழங்கியது எல்லாமே ஒரு விளையாட்டுஎன்ற பெயரில் நடந்த நாடகத்திற்குதானா.
 நான்தான் அந்த அரைகுறை உடையுடன் கூடிய நடிகை என்று தானாகவே மீடியா முன் ஆஜரான வடமாநில நடிகை நூபுர்எனக்கு எந்த கிரிக்கெட் வீரர்களையும் தெரியாதுஎனதுபுகழுக்கு(!)களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது விடிந்ததும் வழக்கு போடப்போகிறேன் என்று ரொம்பவே ஆவேசப்பட்டார்விடிந்து பார்த்தால் எனக்கு "லேசாகஇலங்கை வீரர்தில்ஷனைத் தெரியும் என்றார்அத்தோடு ஆவேசம் அடங்கிவிட்டதுஇன்றைய தேதிவரை வக்கீல் "நோட்டீஸ்கூட அனுப்பவில்லைஇப்படி எப்படி பார்த்தாலும் கிரிக்கெட் என்பதுநாடகமாகவும்மூளைச்சலவை செய்வதாகவும்இளைய வயதினரின் நேரத்தை கொல்வதாகவும் உள்ள ஒன்றாகவே உள்ளதுகிட்னியை விற்று கூட கிரிக்கெட் பார்ப்பேன் என்றுபெங்களூரு ரசிகர் சொன்னதாக வந்த செய்தியைப் படித்தாலே எந்த அளவு கிரிக்கெட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது புரியும்இவர்இந்தியாவின் ஒரு பானைசோற்றுக்கான ஒரு பருக்கையை போன்றவர்சச்சினை பொறுத்தவரை நூறு சதம் அடித்தவுடனேயே "ரிட்டையர்ஆவார் என்று எதிர்பார்த்தார்கள்ஆனால் அவரோ எனக்கு தெரியும்எப்போது ஒய்வு பெறுவது என்று சொல்லிவிட்டார்யாருக்கு தெரியும் அவரது பல நூறு கோடி பெறுமான அசையா மற்றும் அசையும் சொத்துக்களைத் தாண்டி உள்ள கடனைஅடைப்பதற்காக விளையாடுகிறாரோ என்னவோபாவம் வெளிநாட்டில் இருந்து பரிசாக வந்த காருக்கு கூட வரி விலக்கு கேட்டவர்தானேஇவருக்கு பாரத ரத்னா விருதுகொடுக்கவில்லையே என்று வேறு பலருக்கு வருத்தம்நீதிபதி மார்கண்டேயே கட்சூ நன்றாகத்தான் கேட்டார், "பாரத ரத்னா என்பது சமூகத்திற்காக சேவை செய்தவர்களுக்காகதரப்படும் மிக உயர்ந்த விருதுஇதை தங்களது சுய முன்னேற்றம் மற்றும் வருமானத்திற்காக செயல்படும் கிரிக்கெட் வீரர்களும்சினிமாக்காரர்களுக்கும் கேட்பது என்பது எந்தவிதத்தில் நியாயம் என்றே தெரியவில்லைஅந்த விருதை இனியும் கொச்சை படுத்தாதீர்கள்எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறதுஎன்றார்நமக்கும்தான். 
நம்மை "ஹீரோ'வாக தலையில் வைத்து கொண்டாடும் தேசத்தில் மாறி,மாறி மதுபான விளம்பரங்களில் நடிக்கிறோமேநமது ரசிகர்கள் நாம் சொன்னால் நஞ்சை கூட ரசித்துகுடித்துவிடுவார்களே என்றுகொஞ்சமும் மனசாட்சியில்லாமல் தோனியும்ஹர்பஜனும் மதுபான விளம்பரங்களில் தோன்றிகுடிப்பதை உற்சாகப்படுத்திக்கொண்டுதானேஇருக்கிறார்கள்பணமும்செல்வாக்கும் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற கிரிக்கெட் அமைப்பின் எண்ணத்திற்கு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.தேர்தல் சமயம் பாதுகாப்பு தரமுடியாது கொஞ்சம் காலம் தள்ளி விளையாட முடியுமா என்று கேட்டதற்குஅதெல்லாம் முடியாது என்று தென் ஆப்ரிக்காவிற்கு சென்றுவிளையாடியவர்கள்தானே இவர்கள்இவர்களுக்கு பணமே பிரதானம்உண்மையில் இந்திய அணி என்பது ஒன்றும் இந்தியாவிற்கு கட்டுப்பட்ட அணி கிடையாதுஇதனால்இந்தியாவிற்கு எந்த வருமானமும் கிடையாதுஇந்திய அணி என்ற பிராண்டை வைத்துக்கொண்டு பணத்தால் குளிப்பது சில தனியார் அமைப்புகள்தான்.இவ்வளவு வருமானம்வந்தபோதும் வரி செலுத்துவதில் நிறைய முரண்பாடு உண்டுயாரும் கேள்வி கேட்க முடியாது.
 தகவல் அறியும் சட்டத்தில் இருந்து கூட விலக்கு பெற்று உள்ளார்கள்எல்லாவற்றுக்கும் காரணம் தேசம்இவர்கள் மீது காட்டும் கண்மூடித்தனமான பாசம்தான்வறுமையால்தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் நாளுக்கு நாள் பெருகிவரும் ஏழை இந்தியாவில்பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கே பரிதவிக்கும் பழமையான தேசத்தில்அடிப்படைதேவைகளுக்கே அல்லல் படும் எளிய நாட்டில்கிரிக்கெட்டை விளையாடுங்கள்ஆனால் அதை திருவிழா போல கொண்டாடாதீர்கள்கிரிக்கெட்டிற்கு எதிரான புலம்பலாக இதைஎடுத்துக்கொள்ளாதீர்கள்உங்கள் ஆர்ப்பாட்டத்தில்ஆராவாரத்தில் மற்றவர்களின் குறிப்பாக மாணவர்களின் நலனைஎதிர்காலத்தை நசுக்கிவிடாதீர்கள் என்றவேண்டுகோளாகவே ஏற்றுக்கொள்ளுங்கள்வேண்டுமானால் கெஞ்சலாக கூட வைத்துக்கொள்ளுங்கள்விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்முரண்பாடாக பார்க்காதீர்கள்என்பதுதான் அவர்கள் தரப்பில் சொல்லும் ஒரே வார்த்தைஅதையேதான் நாம் திருப்பிச் சொல்கிறோம்உங்களிடம் உள்ள முரண்பாடுகளை விளையாட்டாக்காதீர்கள்.

No comments:

Post a Comment